மேலும் செய்திகள்
10 கிலோ கஞ்சா பறிமுதல்
20-Mar-2025
புழல்:புழல் சிறையில், கஞ்சா மற்றும் மொபைல்போன்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.செங்குன்றத்தை சேர்ந்த தீபக், 27 என்பவர் கஞ்சா கடத்திய வழக்கில் கடந்த பிப்., மாதம் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.தீபக்கை சென்னை விரைவு நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று ஆஜர்படுத்தி, மாலையில் மீண்டும் சிறைக்கு அழைத்து வந்தனர். சிறையில் தீபக்கை சோதனை செய்த போது அவரது ஆசனவாயில் 10 கிராம் கஞ்சா, ஆறு பீடி இருந்தது தெரிந்தது. இதுகுறித்து புழல் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் பாதுகாப்பில் இருந்த கைதியிடம் கஞ்சா இருந்ததற்கு உடன் சென்ற போலீசாரும் உடந்தையா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
20-Mar-2025