உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  நெற்களத்தில் தனியார் வாகனங்கள் ஆக்கிரமிப்பு

 நெற்களத்தில் தனியார் வாகனங்கள் ஆக்கிரமிப்பு

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஊராட்சி அலுவலகம் எதிரே உள்ள நெற்களத்தை ஆக்கிரமித்து தனியார் நிறுவன வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளிப்பட்டு ஒன்றியம், குமாரராஜபேட்டையில் ஊராட்சி அலுவலகம் எதிரே நெற்களம் கட்டப்பட்டுள்ளது. இந்த நெற்களத்தில், தனியார் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால், நெற்களத்தை விவசாயிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஊராட்சி அலுவலகத்திற்கு வந்து செல்லும் பகுதிவாசிகளும் அவதிப்படுகின்றனர். இந்த நெற்களத்தை ஒட்டி, கிராம சேவை மைய கட்டடம், வி.ஏ.ஓ., அலுவலகம், ரேஷன் கடை என பல்வேறு முக்கிய மையங்கள் செயல்பட்டு வருவது ம் குறிப்பிடத்தக்கது. விவசாயிகளின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட நெற்களத்தை ஆக்கிரமித்துள்ள தனியார் வாகனங்களை அகற்ற ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி