உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கல்

 மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கல்

ஊத்துக்கோட்டை: ஆறு அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 452 மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. பெரியபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், பெரியபாளையம் - 95, கன்னிகைப்பேர் - 100 என, மொத்தம் 195 சைக்கிள்கள் வழங்கப்பட்டன. அதேபோல், பென்னலுார்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பென்னலுார்பேட்டை - 37, சீத்தஞ்சேரி - 99, போந்தவாக்கம் - 52, மெய்யூர் - 69 என, 257 இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன. கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜன் பங்கேற்று, மாணவ - மாணவியருக்கு சைக்கிள்களை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ