உள்ளூர் செய்திகள்

பி.டி.ஓ., சஸ்பெண்ட்

திருவள்ளூர், மனை ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு செய்த வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக சித்ரா பெர்னாண்டோ பணிபுரிந்து வந்தார். தற்போது அவர் திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பணிபுரிந்து வருகிறார். புழல் ஒன்றியத்தில் பணியாற்றிபோது அவர் மனை ஒப்புதல், முறைப்படுத்துதல் மற்றும் ஆன்லைன் மூலம் மனைப் பிரிவு அங்கீகாரம் வழங்குதல் போன்றவற்றில் முறைகேடு செய்ததாக தெரிந்தது. இதையடுத்து, அவர் 24ம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ