மேலும் செய்திகள்
மக்கள் குறைதீர் கூட்டம் 530 மனுக்கள் ஏற்பு
29-Jul-2025
திருவள்ளூர், திருவள்ளூரில் நேற்று நடந்த மக்கள் குறை தீர் கூட்டத்தில், 409 மனுக்கள் ஏற்கப்பட்டன. திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர் கூட்டம் கலெக்டர் பிரதாப் தலைமையில் நடந்தது. இதில், நிலம் சம்பந்தமாக 51, சமூக பாதுகாப்பு திட்டம் 54, வேலைவாய்ப்பு வேண்டி 58, பசுமை வீடு, அடிப்படை வசதி கோரி 87 மற்றும் இதரதுறை 159 என மொத்தம் 409 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
29-Jul-2025