மேலும் செய்திகள்
கட்டட தொழிலாளி தவறி விழுந்து பலி
03-Mar-2025
மப்பேடு:கடம்பத்துார் ஒன்றிம் நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமு, 57. இருளஞ்சேரி ஊராட்சியில் பம்ப் ஆப்பரேட்டராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் படிக்கட்டில் இருந்து இறங்கியபோது, கால் தவறி கீழே விழந்தார். படுகாயமடைந்தவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சேர்த்தனர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனையில் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. அவரது மனைவி இந்திரா அளித்த புகாரின்படி, மப்படு போலீசார் விசாரிக்கின்றனர்.
03-Mar-2025