உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாத சிறப்பு பூஜை

பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாத சிறப்பு பூஜை

திருத்தணி:புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமையையொட்டி, திருத்தணி, விஜயராகவ பெருமாள் கோவிலில், நேற்று காலை 7:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர். அதே போல், திருத்தணி அடுத்த நெமிலி கிராமத்தில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவிலில், நேற்று காலை 8:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.மாலை 6:00 மணிக்கு, வண்ணமலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 8:00 மணிக்கு, உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கிராம வீதிகளில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதே போல், திருத்தணி அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவில், பொன்பாடி கொல்லகுப்பம் வெங்கடசேஸ்வர சுவாமி ஆகிய கோவில்களில், புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.மேலும், இரவு உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில், திருவீதியுலா வந்து பக்தர்ளுக்கு அருள்பாலித்தார்.அதேபோல், திருவள்ளூர் வீரராகவர் பெருமாள் கோவில், பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ