ஆரணி மற்றும் கொசஸ்தலை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் மழை வெள்ளம்
கும்மிடிப்பூண்டி:ஆந்திர மாநிலம், பீச்சாட்டூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கங்களுக்கு, தொடர் மழையால் நீர் வரத்து அதிகரித்தது.இதையடுத்து, இரு தினங்களாக, இரு நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், பீச்சாட்டூர் நீர்த்தேக்கத்தில் வெளியேற்றப்படும் தண்ணீர், தமிழக பகுதியில், ஆரணி ஆற்றிலும், பூண்டி நீர்த்தேக்கத்தில் வெளியேற்றப்படும் தண்ணீர், கொசஸ்தலை ஆற்றிலும் வெள்ள பெருக்கெடுத்து ஓடுகிறது.இரு ஆறுகளில் கரைபுரண்டு ஓடும் மழை வெள்ளத்தால், கரையோர பகுதிகளை, நீர்வளத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.கரையோர மக்களை வெள்ள அபாயத்தில் இருந்து பாதுகாக்கும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க, போலீசார் கண்காணித்து வருகின்றனர்.