மேலும் செய்திகள்
ரேஷன் குறைதீர் கூட்டம்
09-Jul-2025
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் இன்று, ரேஷன் கார்டுதாரர் குறைதீர் முகாம் நடக்கிறது.திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று, அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் தொடர்பான குறைதீர் முகாம், வட்ட அளவில் நடைபெற உள்ளது.இந்த முகாமில், பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை, உரிய ஆவணங்களுடன் அளித்து பயன் பெறலாம்.மேலும், முன்னுரிமை குடும்ப அட்டை, 'அந்த்யோதயா, அன்ன யோஜனா' குடும்ப அட்டைதாரர்கள், அனைத்து உறுப்பினர்களும் தங்களது விரல் ரேகையை, வசிக்கும் இடங்களுக்கு அருகிலுள்ள நியாய விலை கடைகளில், வரும் 25ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில், ஆறு தாலுகாக்களில் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம் போன்ற திருத்தங்கள் செய்ய, இன்று சிறப்பு முகாம் நடக்கிறது. இதில், தகுந்த ஆவணங்கள் கொடுத்து தங்களது ரேஷன் கார்டில், பொதுமக்கள் திருத்தங்கள் செய்துகொள்ளலாம். ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களையும், இந்த முகாமில் பதிவு செய்யலாம்.
09-Jul-2025