உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  முதியோருக்கு ரேஷன் பொருள் நாளை வினியோகம்

 முதியோருக்கு ரேஷன் பொருள் நாளை வினியோகம்

திருவள்ளூர்: தாயுமானவர் திட்டத்தில், முதியோருக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் நாளை வினியோகம் செய்யப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 70 வயதுக்கும் மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, ரேஷன் பொருட்கள் வீடு தேடி ஊழியர் வழங்கி வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ், திருவள்ளூர் மாவட்டத்தில், 70 வயதிற்கு மேற்பட்ட வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், 47,718 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். ஜூலை மாதத்திற்கான ரேஷன் பொருட்கள், நாளை வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று வழங்கப்பட உள்ளதாக, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த 4ம் தேதியும் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. விடுப்பட்டவர்களுக்கு நாளை வினியோகம் செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ