உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்பாட்டம்

ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்பாட்டம்

திருத்தணி,:திருத்தணி கமலா தியேட்டர் அருகே, தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில், 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி நேற்று மாலை கண்டன ஆர்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 30க்கும் மேற்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கைகள் வைத்து கோஷம் எழுப்பினர்.அப்போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைபடுத்த வேண்டும். தொகுப்பு ஊதியம், மதிப்பூதியம் சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோரை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை