மேலும் செய்திகள்
அக்னிவீர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
18-Mar-2025
திருவள்ளூர்:'அக்னி வீர்' திட்டத்தில் இந்திய ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வுக்கு, இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:இந்திய ராணுவத்தில் 'அக்னிவீர்' திட்டத்தில், ராணுவ வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சென்னை, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களிலிருந்து திருமணமாகாத இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.பொதுப்பணி, தொழில்நுட்பம், அலுவலக உதவியாளர், சரக்கு அறை காவலர், டிரெட்ஸ்மேன் ஆகிய பதவிகளுக்கு, எட்டும் மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில், ஏப்., 10ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். எழுத்து தேர்வுக்கான ஆளறிசான்று 'ஆன்லைன்' வாயிலாக விநியோகிக்கப்படும்.மேலும் விபரங்களுக்கு, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள இயக்குநர், ஆள்சேர்ப்பு தலைமை அலுவலகத்தை 044 - -2567 4924 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
18-Mar-2025