உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அர்ச்சகர்களுக்கு புத்தொளி பயிற்சி

அர்ச்சகர்களுக்கு புத்தொளி பயிற்சி

திருவள்ளூர்:திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில், ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், மாவட்ட உதவி ஆணையர் சிவஞானம் தலைமையில், கோவில்களில் பணியாற்றும் பூசாரிகள், அர்ச்சகர்கள் மற்றும் பட்டாச்சார்யார்களுக்கு புத்தொளி பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில், ஆகம விதிகள், பக்தர்களிடம் நடந்து கொள்ளும் விதம், கோவிலை சுத்தமாக வைத்துக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவரிக்கப்பட்டது.இதில், மாவட்டத்தில் உள்ள ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணியாற்றுபவர்கள் பங்கேற்றனர். திருவள்ளூர் சரக ஆய்வாளர் கலைவாணன், செயல் அலுவலர் சரவணன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ