உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விபத்தில் பலியான 2 தொழிலாளருக்கு நிவாரண உதவி

விபத்தில் பலியான 2 தொழிலாளருக்கு நிவாரண உதவி

திருவள்ளூர்: பணியின்போது விபத்தில் உயிரிழந்த இரண்டு தொழிலாளர்களின் குடும்பத்திற்கு, கட்டுமான தொழிலாளர் நலவாரியம் வாயிலாக, நிவாரணம் வழங்கப்பட்டது. தொழிலாளர் சமூக பாதுகாப்புத் திட்ட உதவி ஆணையர் செல்வராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில், பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத வெளிமாநில கட்டுமானத் தொழிலாளர்கள், பணியிடத்தில் விபத்தால் மரணம் அடைந்தால், உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பொன்னேரி பகுதியில், கடந்த, செப்., 30ம் தேதி, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த திமராஜ் தவுசன், பணியிடத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தார். அவர் குடும்பத்தினரிடம், 8 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது. அதேபோல, திருவொற்றியூரை சேர்ந்த ஆறுமுகம் என்ற தொழிலாளி, 2021, ஜன., 21ம் தேதி, பணி இடத்தில் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது குடும்பத்தினரிடம், 5 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை