உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பள்ளியில் கழிப்பறை ஏற்படுத்த கோரிக்கை

பள்ளியில் கழிப்பறை ஏற்படுத்த கோரிக்கை

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், அரிசந்திராபுரம் ஊராட்சியில், அரசு நடுநிலைப் பள்ளி, 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், 1 - 8ம் வகுப்பு வரை, மொத்தம் 332 மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். ஒன்றிய அளவில் நடுநிலைப் பள்ளியில் அதிக மாணவர்கள் பயிலும் பள்ளி இதுவாகும். இங்கு பயிலும் மாணவர்களுக்கு போதியளவு கழிப்பறை வசதி இல்லாமல் உள்ளது.இதுகுறித்து, மாணவியரின் பெற்றோர் கூறுகையில், பள்ளியில் ஒரு கழிப்பறை மட்டுமே பயன்பாட்டில் உள்ளது அதனை ஆசிரியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பள்ளியில் 160க்கும் மேற்பட்ட மாணவியர் பயில்கின்றனர்.அவர்கள் உடல் உபாதைகளை வெளியில் கழிக்க முடியாமல் தவிக்கின்றனர். . இதனால் அவர்கள் பல்வேறு உடல் சம்பந்தமான கோளாறுகளை சந்திக்கும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.எனவே இந்த பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை வசதி ஏற்படுத்த, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி