உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கரடிபுத்துாரில் மண் திருட்டு வேலி அமைக்க கோரிக்கை

கரடிபுத்துாரில் மண் திருட்டு வேலி அமைக்க கோரிக்கை

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே ஆந்திர எல்லை பகுதியில் அமைந்துள்ளது கரடிபுத்துார் கிராமம். அந்த கிராமத்தில் ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள கல்லாங்குத்து வகை நிலமாகும்.நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள், பொக்லைன் கொண்டு, அந்த இடத்தில் கிராவல் மண் எடுத்துக்கொண்டிருந்தனர். தகவல் அறிந்து சென்ற கிராம மக்கள், முற்றுகையிட்டு தடுத்து நிறுத்தினர்.இந்த பகுதி ஆந்திர எல்லைக்கு உட்பட்டது என கிராவல் மண் எடுத்தவர்கள் தெரிவித்தனர். பின் பாதிரிவேடு போலீசாருக்கும், வருவாய் துறையினருக்கும் கிராம மக்கள் தகவல் கொடுத்தனர்.கிராவல் மண் எடுக்க வந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், பொக்லைன் இயந்திரத்தை விட்டு சென்றனர். இதுகுறித்து பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.இது போல் அடிக்கடி நடப்பதால், கரடிபுத்துார் எல்லை பகுதியில் வேலி அமைக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !