உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பொன்னேரி அரசு அலுவலக சாலையில் கழிப்பறை வசதி அமைக்க கோரிக்கை

பொன்னேரி அரசு அலுவலக சாலையில் கழிப்பறை வசதி அமைக்க கோரிக்கை

பொன்னேரி:பொன்னேரி தாலுகா அலுவலக சாலையில் முதன்மை சார்பு நீதிமன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றம், கூடுதல் மாவட்ட நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஆகியவை உள்ளன.தவிர, சப் - கலெக்டர் அலுவலகம், கிளைச்சிறை, சார் - பதிவாளர் அலுவலகம் ஆகியவையும் அமைந்துள்ளன. நீதிமன்றங்களுக்கு தினமும், வழக்காடிகள் மற்றும் வழக்கறிஞர்கள் என, ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.நீதிமன்ற வளாகங்களில், போதிய கழிப்பறை வசதி இல்லாததால், இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல், அவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.அதேபோன்று அரசு அலுவலங்களுக்கு வரும் பொதுமக்களும் கழிப்பறை வசதியில்லாமல், பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக பெண்கள் நிலை மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. பொதுமக்கள், வழக்கறிஞர்கள் நலன் கருதி, தாலுகா அலுவலக சாலையில், சுகாதார வளாகம் அமைக்கவும், அதை தொடர்ந்து பராமரிக்கவும் பொன்னேரி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை