உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டுகோள்
திருவாலங்காடு:திருவள்ளூர் --- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் திருவாலங்காடு அமைந்துள்ளது. இங்கு, சர்க்கரை ஆலை சந்திப்பில் இருந்து கனகம்மாசத்திரம், தக்கோலம், அரக்கோணம் சாலை பிரிவு மற்றும் திருவாலங்காடு கிராமத்திற்கு செல்லும் பிரிவு சாலையும் உள்ளது.இந்த சந்திப்பில், இரவு நேரத்தில் போதுமான அளவு வெளிச்சம் இல்லாததால், வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.எனவே, இந்த சந்திப்பு சாலையில் வாகன ஓட்டிகளின் நலன் கருதி, கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, திருவாலங்காடு சர்க்கரை ஆலை சந்திப்பில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.