சிதிலமடைந்த சிவாலயம் புனரமைக்க கோரிக்கை
பள்ளிப்பட்டு:பழமையான சிவாலயத்தின் கோபுர வாயிலும், சுற்றுச்சுவரும் இடிந்துள்ளன. இதை புனரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பள்ளிப்பட்டு பேரூராட்சியில் ஈச்சம்பாடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் வடகிழக்கில், பழமையான சிவாலயம் அமைந்துள்ளது. பராமரிப்பு இல்லாததால் கோவில் சீரழிந்துள்ளது. சுற்றுச்சுவரும், கோபுர வாயிலும் இடிந்து கிடக்கின்றன.கோவில் வளாகம் முழுதும் செடிகள் சூழ்ந்துள்ள நிலையில், பக்தர்கள் சிலர் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். கோவில் பாழடைந்துள்ள நிலையிலும், சிவனடியார் சிலர் தொடர்ந்து பூஜை நடத்தி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், ஈச்சம்பாடியில் பாழடைந்து கிடந்த விஜயராகவ பெருமாள் கோவில், பக்தர்களால் புனரமைக்கப்பட்டது. அதேபோல், சிவன் கோவிலையும் புனரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.