உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிறுவர் பூங்கா சீரமைக்க கோரிக்கை

சிறுவர் பூங்கா சீரமைக்க கோரிக்கை

திருவள்ளூர் : கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்காவை சீரமைக்க கோரி, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.திருவள்ளூர் நகர நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலர் ஜெயபால்ராஜ் கலெக்டரிடம் அளித்துள்ள மனு:திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வரும் பெரும்பாலானோர் தங்களது குழந்தைகளுடன் வருகின்றனர். இவ்வாறு வரும் குழந்தைகள் இளைபாறும் இடமாக இந்த பூங்கா செயல்பட்டு வருகிறது.இந்த பூங்காவை முறையாக பராமரிக்காததால்,செடிகள் வளர்ந்து புதராக காணப்படுகிறது.இதனால், குழந்தைகள் அச்சத்துடன் விளையாடி வருகின்றனர்.மேலும், மாலை நேரத்தில் போதிய விளக்கு வெளிச்சம் இல்லாமல் இருளில் மூழ்கி உள்ளது. எனவே, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பூங்காவை முறையாக பராமரிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை