உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிந்தலகுப்பம் குளம் சீரமைக்க கோரிக்கை

சிந்தலகுப்பம் குளம் சீரமைக்க கோரிக்கை

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த சித்தராஜகண்டிகை ஊராட்சிக்கு உட்பட்டது சிந்தலகுப்பம் கிராமம். அங்கு, தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலை ஓரம், ஐந்து ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் குளம் ஒன்று உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன் வரை மக்களின் பயன்பாட்டில் இருந்த குளமாகும். அதன்பின் முறையான பராமரிப்பு இன்றி போனதால், அப்பகுதியை சுற்றியுள்ள கடைகள் மற்றும் வீடுகளின் கழிவுநீர் மற்றும் குப்பைகள் குவிக்கும் பகுதியாக அந்த குளம் மாறியது. தற்போது, செடி, கொடிகள் சூழ்ந்து, குளம் துார்ந்து போனதுடன் கழிவுகளின் குட்டையாக மாறி சீரழிந்து வருகிறது. கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம், உடனடி நடவடிக்கை எடுத்து குளத்தை துார் வாரி, முறையாக பராமரித்து பாதுகாக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !