உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்மோட்டாரை சீரமைக்க கோரிக்கை

மின்மோட்டாரை சீரமைக்க கோரிக்கை

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், ஆற்காடு குப்பம் ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி சாலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், ஊராட்சி சார்பில் மினி டேங்குடன் கூடிய சிறுமின்விசை குழாய் அமைக்கப்பட்டது.கடந்த சில மாதங்களுக்கு முன், நீர்மூழ்கி மின்மோட்டார் பழுதானது. இதனால், தண்ணீர் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, கோடைக்காலம் துவங்க உள்ளதால், தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது.எனவே, நீர்மூழ்கி மின்மோட்டாரை சீரமைத்து, சிறுமின் விசைக் குழாயை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ