உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பெரும்பேடில் சாலை சீரமைக்க கோரிக்கை

பெரும்பேடில் சாலை சீரமைக்க கோரிக்கை

பொன்னேரி:பொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தில் இருந்து பெரும்பேடு குப்பத்திற்கு செல்லும் ஒன்றிய சாலை சேதம் அடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு, அதில் மழைநீர் தேங்கியும், சரளை கற்கள் பெயர்ந்தும் கிடப்பதால், வாகனங்கள் அதில் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றன.பள்ளி மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு பணியாட்களை ஏற்றிச்செல்லும் வேன்கள் பள்ளங்களில் சிக்கி தவிக்கின்றன. ஆசானபூதுார், வஞ்சிவாக்கம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் பெரும்பேடு வந்து செல்ல இந்த சாலையை பயன்படுத்தும் நிலையில், அது சேதம் அடைந்து கிடப்பதால், கிராமவாசிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.வியாசபுரத்திலும் சாலை சேதம் திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டது வியாசபுரம் ஊராட்சி. இங்கு 5000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இங்கு வியாசபுரம் --- சின்னம்மாபேட்டை வரையில், 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட தார்ச்சாலை, 3 ஆண்டுகளாக சேதமடைந்து இருந்தது. எனவே இந்த தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து நபார்டு மற்றும் கிராமசாலைகள் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் 2.25 கி.மீட்டர் நீளத்திற்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாயில் தார்ச்சாலை அமைக்க கடந்த ஜனவரியில் ஒப்பந்தம் கோரப்பட்டு ஜூலையில் பணி முடிந்தது. சாலை பயன்பாட்டுக்கு வந்து நான்கு மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் சின்னம்மாபேட்டை ஓடை தரைப்பாலம் அருகே சாலை சேதமடைந்து உள்ளது.அரசு அதிகாரிகள் சாலைப்பணியை உரிய முறையில் பார்வையிடாமல் அலட்சியமாக உள்ளதே தரமற்ற சாலை அமைக்க காரணம் என, வியாசபுரம் வாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.திருவள்ளூர் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !