உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கவரைப்பேட்டையில் போலீஸ் பூத் அமைக்க கோரிக்கை

கவரைப்பேட்டையில் போலீஸ் பூத் அமைக்க கோரிக்கை

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டையில், ரயில் நிலைய சாலை, ராஜா தெரு, பழவேற்காடு தெரு உட்பட ஏராளமான குடியிருப்பு பகுதிகள் உள்ளன. கவரைப்பேட்டையில் இயங்கி வந்த காவல் நிலையம், 2018ம் ஆண்டு, 8 கி.மீ., தொலைவில் உள்ள தச்சூர் பகுதிக்கு, புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. அதன் பின், கவரைப்பேட்டை பகுதியில், போலீசார் ரோந்து பணி மேற்கொள்வது, குறைந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.இதனால், கவரைப்பேட்டை பகுதியில், சட்டம் - ஒழுங்கு பாதித்து, குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்கள், அதிக அளவில் கூடும், கவரைப்பேட்டை ரயில் நிலைய பகுதியில், சமூக விரோதிகள் சிலர், போதை பொருட்களை விற்பதாகவும் கூறப்படுகிறது.கவரைப்பேட்டை மக்களின் பாதுகாப்பு கருதி, அங்குள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி பள்ளி அருகே உள்ள பொது இடத்தில், போலீஸ் பூத் அமைக்க வேண்டும். அதில், போலீசார் நியமித்து, 24 மணி நேரமும் கவரைப்பேட்டை பகுதியை கண்காணிக்க வேண்டும். குற்ற சம்பவங்களை தடுக்க, கவரைப்பேட்டை பகுதியில், கண்காணிப்பு கேமரா அதிக அளவில் பொருத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை