பென்னலுார்பேட்டையில் நிழற்குடை அமைக்க கோரிக்கை
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, பென்னலுார்பேட்டை கிராமத்தில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கூலி வேலை. இங்கு அரசு மேல்நிலைப் பள்ளி, காவல்நிலையம் உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன.இப்பகுதி மக்கள் அத்தியாவசித் தேவைக்கு, 12 கி.மீட்டர் துாரமுள்ள ஊத்துக்கோட்டை சென்று வருகின்றனர். பெரும்பாலானவர்கள் டூ- வீலர்களில் செல்லும் நிலையில், ஏழை மக்கள் பேருந்தில் பயணிக்கின்றனர். கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன் இங்கு பேருந்து நிழற்குடை கட்டப்பட்டது.தற்போது சிதிலமடைந்து சிமென்ட் காரைகள் பெயர்ந்து எப்போது கீழே விழுமோ என்ற அபாய நிலையில் உள்ளது. தற்போது இந்த இடம் குப்பை கொட்டும் இடமாக மாறி உள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் எவ்வித பலனும் என புலம்புகின்றனர். எனவே, மக்கள் நலன் வேண்டி, மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பென்னலுார்பேட்டை கிராமத்தில் நிழற்குடை கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.