உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  பி.எஸ்.என்.எல்., டவர் அமைக்க கோரிக்கை

 பி.எஸ்.என்.எல்., டவர் அமைக்க கோரிக்கை

திருவள்ளூர்: தேவந்தவாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில், பி.எஸ்.என்.எல்., சிக்னல் கிடைக்காததால், புதிய டவர் அமைக்க வேண்டும் என பிரதமருக்கு மனு அளித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், தேவந்தவாக்கம் ஊராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மயிலாப்பூர், செங்குன்றம், கரக்கம்பாக்கம், கொருக்கு தண்டலம் சுற்றி, 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அப்பகுதிகளில், 500க்கும் மேற்பட்டோர், பி.எஸ்.என்.எல்., மொபைல் சேவையினை பயன்படுத்தி வருகின்றனர். வனப்பகுதியில் அமைந்துள்ள அப்பகுதியில், பி.எஸ்.என்.எல்., சிக்னல் கிடைக்காததால், மொபைல் போன் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அவசர தேவைகளுக்கு, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதியினை கூட, அழைக்க முடியாமல், கிராம மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்திற்கு கடந்த ஆறு மாதத்திற்கு முன் புகார் அளித்தனர். அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து, புதிதாக 'டவர்' அமைக்கப்படும் என கூறிச் சென்றனர். இதுவரை, 'மொபைல் டவர்' அமைக்கப்படவில்லை. இதையடுத்து, தேவந்தவாக்கம் கிராம மக்கள், பி.எஸ்.என்.எல்., மொபைல் டவர் அமைக்க வேண்டும். அப்படி அமைத்தால், தனியார் இணைப்பில் உள்ள மொபைல் சேவையினை, பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்திற்கு மாற்றிக் கொள்வோம் என, பிரதமருக்கு மனு அனுப்பி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை