உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / துக்க வீட்டில் தகராறு இருவருக்கு காப்பு

துக்க வீட்டில் தகராறு இருவருக்கு காப்பு

செவ்வாப்பேட்டை:திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன், 43. இவரது மனைவி வீரலட்சுமி. தமிழர் முன்னேற்ற படை தலைவராக உள்ளார்.இவரது வீட்டின் அருகே வசித்து வரும் வெங்கடேசன் என்பவரது உறவினர் வீட்டில், கடந்த 29ம் தேதி நடந்த துக்க நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்ட இலை குப்பைகள் கணேசன் வீட்டின் அருகே கொட்டப்பட்டது. இதில் ஏற்பட்ட தகராறில், கணேசன் கட்டையால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து கணேசன் கொடுத்த புகாரின்படி வெங்கடேசன், மணிகண்டன், பாஸ்கர், லட்சுமணன் ஆகிய நால்வர் மீது செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இதில், மணிகண்டன், 42, பாஸ்கர், 38, ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், நேற்று முன்தினம் மாலை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர். மேலும், இருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை