உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நீர்த்தேக்க தொட்டி படுமோசம் அச்சத்தில் குடியிருப்பு வாசிகள்

நீர்த்தேக்க தொட்டி படுமோசம் அச்சத்தில் குடியிருப்பு வாசிகள்

அரண்வாயல்:திருவூர் அடுத்த அரண்வாயல் ஊராட்சியில், திருமழிசை - திருவள்ளூர் நெடுஞ்சாலையோரம் உள்ள விநாயகர் கோவில் அருகே, பகுதிவாசிகள் பயன்பாட்டிற்காக, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.இந்த குடிநீர் தொட்டி, கடந்த 2012 - 13ம் ஆண்டு ஊரக வளர்ச்சி திட்ட கட்டடங்கள் சீரமைப்பு திட்டத்தின் கீழ், 21,000 ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டது.அதன்பின், 12 ஆண்டுகளாக எவ்வித பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாதாதல், குடிநீர் தொட்டி மேல்புறம் உட்பட பல்வேறு இடங்களில் சேதமடைந்து, இடிந்து விழும் அபாயநிலையில் உள்ளது. இதனால், குடிநீர் தொட்டி அருகே வசித்து வரும் பகுதிவாசிகள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊராட்சியில் ஆய்வு செய்து, குடிநீர் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அரண்வாயல் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ