உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆடு திருடர்கள் போலீசில் ஒப்படைப்பு விடுவித்ததால் தண்டலம் பகுதியினர் அதிருப்தி

ஆடு திருடர்கள் போலீசில் ஒப்படைப்பு விடுவித்ததால் தண்டலம் பகுதியினர் அதிருப்தி

செவ்வாப்பேட்டை:திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை அடுத்த, தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித், 42; நான்கு தினங்களுக்கு முன், இவரது வீட்டில் இருந்த ஆடுகளை, 'மகேந்திர சைலோ' காரில் வந்த மர்ம நபர்கள் வாயை கயிற்றால் கட்டி காரில் கடத்திச் செல்ல முயன்றனர்.இதை கண்ட அப்பகுதியினர் ஒன்றுகூடி காரை வழிமறித்து, காரில் இருந்த நான்கு பேரையும் தர்ம அடி கொடுத்து கயிற்றால் கட்டி வைத்து, செவ்வாபேட்டை போலீசுக்கு தகவல் அளித்தனர்.செவ்வாப்பேட்டை போலீசார் காரை பறிமுதல் செய்து நான்கு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து ரஞ்சித் அளித்த புகாரையடுத்து, வழக்கு பதிந்த செவ்வாப்பேட்டை போலீசார் விசாரணைக்கு பின் அவர்களை விடுதலை செய்தனர்.ஆடு திருடியவர்களை சிறையில் அடைக்காமல் விடுதலை செய்தது தண்டலம் கிராமவாசிகளிடையே, செவ்வாப்பேட்டை போலீசார் மீது அதிருப்தி ஏற்பட்டது.எனவே, மாவட்ட நிர்வாகம் ஆடு திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீசார் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தண்டலம் கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் கூறியதாவது:தண்டலம் பகுதியில் ஆடு திருடியவர்களை பகுதிவாசிகள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். அப்போது கடும் மழை பெய்து கொண்டிருந்ததால் புகார் கொடுத்தவரிடம் சி.எஸ்.ஆர்., பதிவு செய்து கொடுத்து விட்டோம். போலீசாரும் திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா பாதுகாப்பு பணக்கு சென்று விட்டனர்.பின், நடத்திய விசாரணையில், அவர்கள் சென்னை, திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த அருண், 24, அருண்குமார், 24, ஹயாசுதீன், 24 மற்றும் மோத்திபாபு என தெரிய வந்தது.அவர்களிடமிருந்த, 'மகேந்திர சைலோ' காரை பறிமுதல் செய்து அவர்களை திங்கள்கிழமை விசாரணைக்கு வர வேண்டும் என, உத்தரவிட்டு அனுப்பி உள்ளதாக தெரிவித்தனர். பின், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ