உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  சாலையில் கழிவு நீர் தொற்று நோய் அபாயம் சாலையில் கழிவு நீர் தொற்று நோய் அபாயம்

 சாலையில் கழிவு நீர் தொற்று நோய் அபாயம் சாலையில் கழிவு நீர் தொற்று நோய் அபாயம்

திருவாலங்காடு ஊராட்சியில் நான்கு வழிச்சாலை முதல் வடாரண்யேஸ்வரர் கோவில் வரை, 1 கி.மீ., நீள இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலை பாஞ்சாலி நகர் பகுதியில் ஆங்காங்கே சேதமடைந்து உள்ளது. திரவுபதி அம்மன் கோவில் அருகே சாலை மிகவும் சேதமடைந்து, பள்ளம் விழுந்துள்ளது. அங்கு, கழிவுநீரும் தேங்கியுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கழிவுநீரை மிதித்து செல்லும் அவலநிலை உள்ளது. நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளாகும் அபாயமும் உள்ளதால், பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர். சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - மா. சுதாகரன், திருவாலங்காடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ