உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆர்.எம்.கே., விளையாட்டு விழா முல்லை அணி சாம்பியன்

ஆர்.எம்.கே., விளையாட்டு விழா முல்லை அணி சாம்பியன்

சென்னை, கவரைப்பேட்டையில்உள்ள, ஆர்.எம்.கே., மெட்ரிக் பள்ளியில் நடந்த விளையாட்டு தின விழாவில், முல்லை அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.திருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள ஆர். எம்.கே, மெட்ரிக் பள்ளியில், விளையாட்டு தினவிழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவை, ஆர்.எம்.கே., கல்விக்குழுமங்களின்தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் தலைமையில், தமிழக உயர்கல்வித்துறையின் இணைசெயலர் ரவிச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.கலாசாரத்தை பிரதிபலிக்கும் கண்கவர் நடனங்கள், யோகா, சிலம்பம், உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று, முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, நான்கு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.தவிர, பலவித விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று, 552 புள்ளிகள் பெற்ற முல்லை அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.தொடர்ந்து, 450 புள்ளிகள் பெற்ற நெய்தல் அணி இரண்டாம் இடத்தை பிடித்தது.இவ்விழாவில் கல்விக்குழுமங்களின் இயக்குநர் ஜோதி நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !