உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

திருவள்ளூர், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நேற்று நடந்தது.திருவள்ளூர் மாவட்ட நெடுஞ்சாலைத் துறை சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பேரணியை, உதவி கலெக்டர் ஆயுஷ் குப்தா துவக்கி வைத்தார்.இப்பேரணியில் 150க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்று, சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மேலும், அரசு பேருந்தில் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு அடங்கிய வாசகங்களுடன் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதை, பேரணியில் பங்கேற்ற மாணவ - மாணவியர் பார்வையிட்டனர்.பின் அனைவருக்கும், போக்குவரத்து விழிப்புணர்வு வாசகம் அடங்கிய துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில், திருவள்ளூர் நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் கோவிந்தராஜன், உதவி கோட்டப் பொறியாளர் தஸ்னேபிஸ் பெர்னான்டோ உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ