டாஸ்மாக்கில் கொள்ளை முயற்சி
தாமரைப்பாக்கம்: எல்லாபுரம் ஒன்றியம், தாமரைப்பாக்கம் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் விற்பனையாளர் தேவேந்திரன், 52, கடையை மூடிவிட்டு சென்றார். நேற்று மதியம் கடையை திறந்த போது, பக்கவாட்டு சுவரில் துளையிடப்பட்டு இருந்தது. ஆனால், மதுபாட்டில் மற்றும் பணம் திருடுபோகவில்லை என, தெரியவந்தது. இதுகுறித்து தேவேந்திரன், வெங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.