உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 17 பணிகளுக்கு ரூ.1.2 கோடி ஒதுக்கீடு

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 17 பணிகளுக்கு ரூ.1.2 கோடி ஒதுக்கீடு

ஊத்துக்கோட்டைஊத்துக்கோட்டை பேரூராட்சியில், 15 வார்டுகளில், 20,000க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இங்கு, 100க்கும் மேற்பட்ட தெருக்களில், 3,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இங்கு, பேரூராட்சி பொது நிதியில் இருந்து, சத்தியவேடு சாலையில் மழைநீர் கால்வாய்க்கு, 5.90 லட்சம் ரூபாய், அண்ணாநகரில் கால்வாய்க்கு, 5.95 லட்சம் ரூபாய், விவேகானந்தா 2வது தெருவில், 11.60 லட்சம் ரூபாய், அம்பேத்கர் நகரில் சமுதாயகூட பகுதியில், சிமென்ட் கல் சாலைக்கு, 7.60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.திருவள்ளூர், நாகலாபுரம், சத்தியவேடு சாலைகளில் உள்ள கால்வாய்களில் மண் கழிவுகளை அகற்ற 6.30 லட்சம் ரூபாய், மேல்சிட்ரபாக்கம் அங்காளம்மன் சாலை பணிக்கு, 7.25 லட்சம் ரூபாய், திருவள்ளூர் சாலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி நுழைவாயிலில் சிமென்ட் சிலாப்புடன் கூடிய கால்வாய்க்கு, 5.90 லட்சம் ரூபாய் உள்ளிட்ட 17 பணிகளுக்கு, 1.2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, பேரூராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:பேரூராட்சியில் மொத்தம், 17 பணிகளுக்கு, ஒரு கோடியே, இரண்டு லட்சத்து, 37,000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேற்கண்ட பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது.பணிக்கான ஆணை விரைவில் வழங்கப்பட்டு, பணிகள் துவக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை