உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / துாய்மை பணியாளருக்கு ரூ.5.37 லட்சம் நல உதவி

துாய்மை பணியாளருக்கு ரூ.5.37 லட்சம் நல உதவி

திருவள்ளூர், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டம் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவு வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு அரசு வழங்கும் தீருதவித் தொகை உரிய காலத்திற்குள் வழங்க வேண்டும். துாய்மை பணியாளர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் மற்றும் அவர்களது முன்னேற்றத்தில் அக்கறை செலுத்த வேண்டும். துாய்மை பணிபுரிவோர் நலவாரிய உறுப்பினர் பட்டியலில் அனைவரையும் சேர்த்து அடையாள அட்டை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.தாட்கோ திட்டத்தின் கீழ் 12 துாய்மை பணியாளர்களுக்கு 5.37 லட்சம் மதிப்பிலான உதவி தொகை வழங்கப்பட்டது. திருவள்ளூர் எஸ்.பி., ஸ்ரீநிவாச பெருமாள், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், ஆதிதிராவிடர் நல அலுவலர் செல்வராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை