உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மணல் திருட்டு ஆட்டோ பறிமுதல்

மணல் திருட்டு ஆட்டோ பறிமுதல்

கடம்பத்துார், கடம்பத்துார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் கடம்பத்துார், பிஞ்சிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, ராமன் கோவில் பகுதியில் உள்ள ஏகாத்தம்மன் கோவில் அருகே, கொசஸ்தலை ஆற்றிலிருந்து சரக்கு ஆட்டோவில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் இருவரும் ஆட்டோவை விட்டு தப்பியோடினர். இதுகுறித்து வழக்கு பதிந்த கடம்பத்துார் போலீசார், ஆட்டோவை பறிமுதல் செய்து, தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ