உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மணல் திருட்டு பைக் பறிமுதல்

மணல் திருட்டு பைக் பறிமுதல்

கடம்பத்துார்:கடம்பத்துார் அடுத்த புதுமாவிலங்கை பகுதியில் கடம்பத்துார் காவல் உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் காலை ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கூவம் ஆற்று பகுதியிலிருந்து வந்த டி.வி.எஸ். ஸ்டார் இரு வாகனத்தை ஓட்டி வந்த நபர்கள் போலீசாரைக் கண்டதும் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பியோடினர். இதையடுத்து போலீசார் சோதனை செய்த போது கூவம் ஆற்றில் அனுமதியின்றி மணல் திருடி வந்தது தெரிந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த கடம்பத்துார் போலீசார் இரு சக்கர வாகனத்தையும் மணல் மூட்டையையும் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய புதுமாவிலங்கை கண்டிகை பகுதியைச் சேர்ந்த ராமு, வேலு ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை