சாலையில் சவுடு மணல் லாரிகள் ஓய்வு வாகன ஓட்டிகள் திக்... திக் பயணம்
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் ஏரியில், அரசு அனுமதியுடன் சவுடு மணல் அள்ளும் பணி நடந்து வருகிறது. இங்கு அள்ளப்படும் சவுடு மணலை எடுத்து செல்வதற்காக காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல இடங்களிலிருந்து, தினமும் 1,000க்கும் மேற்பட்ட லாரிகள் திருவள்ளூர் வழியாக வந்து செல்கின்றன.இந்த லாரிகள் மணல் எடுத்து செல்ல, காலை 8:00 - 10:00 மணி வரையும், மாலை 4:00 - இரவு 10:00 மணி வரை சவுடு லாரி மற்றும் கனரக வாகனங்கள், திருவள்ளூர் நகர் வழியே செல்வதற்கு, காவல் துறை தடை விதித்துள்ளது.இதனால், இந்த லாரிகள் திருவள்ளூர் - கடம்பத்துார் நெடுஞ்சாலை மற்றும் சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையோரம் அணிவகுத்து நிற்கின்றன.இதனால், இந்த வழியே கடம்பத்துார், பேரம்பாக்கம், காஞ்சிபுரம், சென்னை, திருப்பதி செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.சில நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதோடு, இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விபத்தில் பலியாகி வருகின்றனர். சவுடு மணல் லாரிகளால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வரும் நிலையில், போலீஸ் வாகனமும் சாலையில் நிறத்தப்படுவதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் சவுடு மணல் லாரிளை ஏரி பகுதியில் நிறுத்தி, போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஒட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.