மேலும் செய்திகள்
அந்தேரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
05-May-2025
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான சப்த கன்னியம்மன் கோவில், திருத்தணி - கன்னிகாபுரம் மாநில நெடுஞ்சலையில் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகம், கடந்த 16ம் தேதி கணபதி மற்றும் நவக்கிரக ஹோமத்துடன் துவங்கியது.கோவில் வளாகத்தில், ஒன்பது யாகசாலைகள் அமைத்து, 108 கலசங்கள் வைத்து பூஜைகள் நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு ஊர்வலமாக கலசங்கள் புறப்பட்டு, கோபுர கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, மூலவர் சப்த கன்னிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், முருகன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி உட்பட சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
05-May-2025