உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புரட்டாசி மாத சனிக்கிழமை பூஜை பெருமாள் கோவிலில் விமரிசை

புரட்டாசி மாத சனிக்கிழமை பூஜை பெருமாள் கோவிலில் விமரிசை

திருத்தணி:புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ஒட்டி, பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை ஒட்டி, திருத்தணி அடுத்த பொன்பாடி கொல்லகுப்பம் கிராமத்தில் உள்ள வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், நேற்று காலை 9:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இரவு, உற்சவர் மாட்டு வண்டியில் வீதியுலா வந்தார்.திருத்தணி விஜயராகவ பெருமாள் கோவிலில், நேற்று காலை 7:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதே போல், திருத்தணி அடுத்த நெமிலி கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி வைகுண்ட பெருமாள் கோவிலில், நேற்று காலை 8:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தார். திருத்தணி அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பாமா, ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவில், திருத்தணி பெரிய தெருவில் உள்ள கிருஷ்ணர் கோவில் உட்பட, திருத்தணி தாலுகாவில் உள்ள பெருமாள் கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன. ஊத்துக்கோட்டை ஊத்துக்கோட்டை பேரூராட்சி, ரெட்டித் தெருவில் பஜனை கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில் நேற்று காலை, சுவாமியின் படத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்து, பூஜை நடந்தது. பின், சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆர்.கே.பேட்டை ஆர்.கே.பேட்டை, கோரகுப்பம் அருகே பாவலுார் கண்டிகை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் மலை மீது வெங்கடேச பெருமாள் அருள்பாலித்து வருகிறார். நேற்று வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு கோவில் மண்டபத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது. கருட சேவை மேல்பொதட்டூர் தரணிவராக சுவாமி கோவில் பிரம்மோத்சவத்தில், நேற்று இரவு கருடசேவை நடந்தது. உத்சவ பெருமாள், கருட வானகத்தில் வீதியுலா எழுந்தருளினார். மேல்பொதட்டூர் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள், சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை