உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பஸ்சிலிருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் கால் முறிவு

பஸ்சிலிருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் கால் முறிவு

மப்பேடு:மப்பேடு அருகே தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் காலில், பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியதில் எலும்பு முறிவு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் சோகண்டியைச் சேர்ந்தவர் சங்கர் மகன் புருஷோத்தமன், 16. தந்தை இறந்து விட்டார். பண்ணுாரில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை 8:30 மணி சோகண்டியில் இருந்து தனியார் பேருந்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். பேருந்தின் முன்பக்க படிக்கட்டில் நின்ற போது, மாணவன் கீழே விழுந்தார். இதில், பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியதில், மாணவனின் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. படுகாயமடைந்த மாணவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தகவலறிந்து வந்த மப்பேடு போலீசார், பேருந்தை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை