உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வெள்ளப்பெருக்கு எதிர்கொள்ள நாளை பாதுகாப்பு ஒத்திகை

வெள்ளப்பெருக்கு எதிர்கொள்ள நாளை பாதுகாப்பு ஒத்திகை

திருவள்ளூர்:பூண்டி நீர்த்தேக்கத்தில் உபரி நீர் திறக்கும் போது, கொசஸ்தலை ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை எதிர்கொள்வது குறித்த பாதுகாப்பு ஒத்திகை, நாளை ஐந்து கிராமங்களில் நடக்கிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம், சென்னை நகர குடிநீர் தேவைக்காக கொசஸ்தலை ஆற்றின் நடுவே கடடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மழைக்காலத்திலும், நீர்த்தேக்கத்தில் அதிகளவில் தண்ணீர் வந்தால், உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படும்போது வெள்ளப்பெருக்கு ஏற்படும்.எனவே, கொசஸ்தலை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை, நாளை மாலை 4:00 மணிக்கு வெள்ளிவாயல், ராமதண்டலம், மோவூர், குருவாயல் மற்றும் சேத்துப்பாக்கம் ஆகிய ஐந்து இடங்களில் 'மாக் டிரில்' ஒத்திகை நடைபெற உள்ளது.இதில் வருவாய், நீர்வளம், காவல், தீயணைப்பு, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளின் சார்பிலும், ஒலிபெருக்கி வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இதுதொடர்பாக யாரும் அச்சப்பட வேண்டாம். கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 044 - 2766 4177, 2766 6746 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை