உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிற்றரசூர் கிராமத்தில் தொடர் திருட்டு

சிற்றரசூர் கிராமத்தில் தொடர் திருட்டு

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த சிற்றரசூர் கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு அங்கன்வாடி மையத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த பொருட்களை திருட முயன்றனர். கடந்த மாதம், அந்த அங்கன்வாடி மையத்தில் காஸ் சிலிண்டரை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.நேற்று முன்தினம் இரவு, அதே கிராமத்தில் உள்ள முக்தீஸ்வரர் கோவிலின் ஜன்னல் வழியாக உண்டியலை உடைத்து அதிலிருந்த பக்தர்கள் காணிக்கைகளை திருடி சென்றனர். அடுத்தடுத்து நடந்த திருட்டு சம்பவங்களால் சிற்றரசூர் கிராம மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை