உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / முன்விரோதத்தால் கோஷ்டி மோதல் 7 பேர் காயம்; ஒருவருக்கு காப்பு

முன்விரோதத்தால் கோஷ்டி மோதல் 7 பேர் காயம்; ஒருவருக்கு காப்பு

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், சூரியநகரம் ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் டில்லி, 50. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சபாபதி, 39, என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு பின் இரு தரப்பினரும், தன் ஆதரவாளர்கள் கோஷ்டி மோதலாக மாறி, உருட்டை கட்டை மற்றும் கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.இதில், டில்லி, நளினி, சுகுணா, பிரியா, சபாபதி, சந்திரா, விஜயா ஆகிய ஏழு பேரும் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இருதரப்பினர் அளித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, திருமலை, 55, என்பவரை, மட்டும் கைது செய்து, மீதமுள்ள 7 பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை