கால்வாயில் தேங்கிய கழிவுநீர் ஊத்துக்கோட்டையில் துர்நாற்றம்
ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், பஜார், திருவள்ளூர், நாகலாபுரம், சத்தியவேடு ஆகிய சாலை உள்ள பகுதி முக்கியமானவை. இங்கு, குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்ளன.இங்குள்ள வீடுகள், கடைகளில் இருந்து கழிவுநீர் வெளியேற கால்வாய் உள்ளன. இந்த கால்வாயில், மூடி இல்லாததால், குப்பை நிறைந்து காணப்படுகிறது. முறையான பராமரிப்பு இல்லாததால், ஆங்காங்கே தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது.மேலும், நோய் பரவும் அபாயம் உள்ளது. மழைக்காலங்களில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே, ஊத்துக்கோட்டை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மேற்கண்ட பகுதிகளில் உள்ள கால்வாயை துார்வார வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, பேரூராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பஜார், திருவள்ளூர், நாகலாபுரம், சத்தியவேடு சாலைகளில் இரண்டு பக்கமும் உள்ள கால்வாய்களில் உள்ள மண் கழிவுகளை அகற்ற, 6.30 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது. பணிகள் விரைவில் துவங்கி சீரமைக்கப்படும்' என்றார்.