உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆறாக ஓடும் கழிவுநீர் கும்மிடியில் அபாயம்

ஆறாக ஓடும் கழிவுநீர் கும்மிடியில் அபாயம்

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி, 11வது வார்டுக்கு உட்பட்டது மணியக்கார தெரு. இந்த தெருவில், 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் சாலை மற்றும் கால்வாய் அமைக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்க முன் கால்வாய் துார்ந்து போனதால், கழிவுநீர் செல்ல வழியின்றி தெருவில் ஆறாக ஓடுகிறது. இதனால், சுகாதாரமற்ற சூழலில் பகுதிமக்கள் வசித்து வருகின்றனர். இது தொடர்பாக, பலமுறை பேரூராட்சி அலுவலகத்திடம் புகார் தெரிவித்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை