உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / உரிய பாதுகாப்பு இன்றி  சாக்கடை சுத்தம் பணி

உரிய பாதுகாப்பு இன்றி  சாக்கடை சுத்தம் பணி

ஆவடி:ஆவடி, காமராஜர் நகர் பிரதான சாலையில் உள்ள கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியில், துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.இங்குள்ள எட்டாவது தெருவில் உள்ள கால்வாயை சுத்தம் செய்யும் பணியில், சிலர் நேற்று ஈடுபட்டனர்.அவர்களுக்கு, சாக்கடை கழிவுகளை அகற்றுவதற்கான முறையான உபகரணங்கள் வழங்கவில்லை.காலணி எதுவும் அணியாமல், மணிக்கட்டு வரை மட்டும் அணியக்கூடிய ரப்பர் கையுறை மட்டும் வழங்கி, பணியாளர்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.ஏற்கனவே, உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல், கழிவுநீர் அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட நான்கு ஒப்பந்த பணியாளர்கள், விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.இந்நிலையில், உரிய பாதுகாப்பு இல்லாமல் சாக்கடை அடைப்பை செய்யும் பணியில் ஊழியர்களை ஈடுபடுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ