உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கழிவுநீர் கால்வாய் சேதம்

கழிவுநீர் கால்வாய் சேதம்

ஊத்துக்கோட்டை,:பாலாஜி நகரில் சேதமடைந்த கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சி, பாலாஜி நகரில் உள்ள கழிவுநீர் கால்வாய், சில மாதங்களுக்கு முன் சாலை அமைக்கும் போது சேதமடைந்தது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இதுகுறித்து, பேரூராட்சி நிர்வாகத்திடம், அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ