உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கோயம்பேடு சந்தையில் கடை ஒதுக்கீடு ரத்து

கோயம்பேடு சந்தையில் கடை ஒதுக்கீடு ரத்து

சென்னை, சென்னை, கொத்தவால் சாவடியில் இருந்த காய்கறி மொத்த வர்த்தகம், 1996ல் கோயம்பேடு சந்தைக்கு மாற்றப்பட்டது. இதற்காக, கோயம்பேடில், 3,000 கடைகள் கட்டப்பட்டு, வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டன. அந்த வகையில் ஜெயராமன் என்பவர், தனக்காக ஒதுக்கப்பட்ட கடையை, வேறு சில நபர்களின் பெயருக்கு பரிமாற்றம் செய்துள்ளார். இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜெயராமன், தன் கும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் பெயரில் கடைகளை பரிமாற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதில் முறைகேடுகள் நடந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நபருக்கான கடை ஒதுக்கீட்டை ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, ஜெயராமன் தொடர்பான கடை ஒதுக்கீட்டை ரத்து செய்யுமாறு, அங்காடி நிர்வாக குழுவுக்கு, சி.எம்.டி.ஏ., நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என, அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை