உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிறுவாபுரி கோவில் உண்டியல் வசூல் ரூ.81 லட்சம், 89 கிராம் தங்கம்

சிறுவாபுரி கோவில் உண்டியல் வசூல் ரூ.81 லட்சம், 89 கிராம் தங்கம்

கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் கடந்த இரு மாத கால உண்டியல் காணிக்ககையாக, 81 லட்சம் ரூபாய் , 89 கிராம் தங்கம் வசூலானது. சின்னம்பேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. செவ்வாய், ஞாயிறு, விடுமுறை மற்றும் விஷேச நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிறுவாபுரி முருகனை தரிசிக்க வருவர். வேண்டுதல் நிறைவேற, பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக கோவில் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்துவது வழக்கம். நேற்று, கோவில் பிரகாரத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. ஹிந்து சமய அறநிலையத் துறையின் திருத்தணி உதவி ஆணையர் விஜயகுமார், திருவள்ளூர் உதவி ஆணையர் சிவஞானம், செயல் அலுவலர் மாதவன் ஆகியோர் மேற்பார்வையில், ஊழியர்கள், பக்தர்கள் கொண்ட குழுவினர் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் 81 லட்சத்து 715 ரூபாய், 89 கிராம் தங்கம், 5 கிலோ 903 கிராம் வெள்ளி பொருட்கள் இருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ